நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, பேரூராட்சி, கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர் கொண்டு கண்டறியப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இதுவரை 74 பள்ளி வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத 44 பள்ளி கட்டடங்கள் 5 பள்ளி கழிவறைகள் 23 சமையல் கட்டடங்கள் தலா ஒரு சமுதாயக் கூடம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டடம் 2 சிமெண்ட் தண்ணீர் தொட்டிகள் ஒரு ஆசிரியர் குடியிருப்பு கட்டிடம் உட்பட 80 கட்டடங்கள் பழுதடைந்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது

மேலும் தனியார் பள்ளியில் பள்ளிக்கூடங்களில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை எஞ்சினியர்கள் பொதுப்பணித்துறை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் கண்டறியும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 14 பழுதடைந்த பயன்பாட்டில் இல்லாத கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் மீதம் உள்ள கட்டடங்களை இடிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர 218 பள்ளிகளில் 669 சிறிய பகுதியில் உள்ள கட்டிடங்களை கண்டறியப்பட்டு இதுவரை 23 கட்டிடங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது

எந்த ஒரு பழுதான கட்டிடமும் தற்போது பயன்பாட்டில் இல்லை மற்றும் பழுதடைந்த கட்டடங்களில் குழந்தைகள் செல்லா வண்ணம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது அப்புறப்படுத்த வேண்டிய பயன்பாட்டில் இல்லாத அனைத்து கட்டிடங்களும் மிக விரைவில் முழுமையாக இடிக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *