தமிழகம் முழுவதும் நகராட்சி பேரூராட்சி ஒன்றிய கடைகள் வாடகை உயர்வை குறைக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அமைப்பு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரே நாளில் நடக்கும் செயல் அல்ல நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு என்பது இருக்க கூடாது அனுமதிக்காது. நியாமான வாடகையை கட்ட பேரவை அமைப்பு தயாராக உள்ள. நகராட்சி தேர்தல் நடந்த பிறகு நகர் மன்றங்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி வாடகை குறைக்க நடவடிக்கை எடுக்கப் படும். நமது குறைகளை கேட்டு காணொலி காட்சி மூலம் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க கூடிய முதல்வரும் தலைமை செயலாளரும் நமக்கு கிடைத்திருக்கிறார்கள் திருச்செங்கோட்டில் நடந்த நகர மத்திய பேருந்து நிலைய கடை வியாபாரிகள் சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா பேச்சு
நகர மத்திய பேருந்து நிலைய கடை வியாபாரிகள் சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்செங் கோட்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சிவா தலைமை வகித்தார். செயலாளர் சரவணசுந்தரம் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அமைப்பு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பேருந்து நிலையத்தில் நடந்த பெயர் பலகை திறப்பு விழாவில் கலந்த கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தும், மற்றும் தனியார் ஓட்டலில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத் திலும் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜாவிடம் கொரோனா கால வாடகைதொகை தள்ளுபடிசெய் வேண்டும், கடந்த ஆட்சிகாலத்தில் உயர்த்தப்பட்ட 100சதவீத வாடகை உயர்வை குறைக்க வேண்டும். கடைகளுக்கு சீல் வைப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்செங்கோடு சங்க நிர்வாகிகள் கொடுத்தனர். இதனை தொடர்ந்துபேசிய விக்கிரமராஜா கூறியதாவது தமிழகம் முழுவதும் நகராட்சி பேரூராட்சி ஒன்றிய கடைகள் வாடகை உயர்வை குறைக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அமைப்பு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரே நாளில் நடக்கும் செயல் அல்ல நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு என்பது இருக்க கூடாது அனுமதிக்காது. நியாமான வாடகையை கட்ட பேரவை அமைப்பு தயாராக உள்ள. நகராட்சி தேர்தல் நடந்த பிறகு நகர் மன்றங்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி வாடகை குறைக்க நடவடிக்கை எடுக்கப் படும். நமது குறைகளை கேட்டு காணொலி காட்சி மூலம் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க கூடிய முதல்வரும் தலைமை செயலாளரும் நமக்கு கிடைத்திருக்கிறார்கள் நமது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் னெ கூறினார். நிகழ்ச்சியில் பேரவை அமைப்பின் மாநில துணைத்தலைவர் வாசுசீனிவாசன்,மாவட்ட பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் உதய குமார், துணைதலைவர் சுப்பிரமணி நகைகடை உரிமையாளர்கள் சங்க தலைவர் லோகநாதன்,ஜவுளிகடை உரிமையாளர்கள் சங்கத்தலை வர் மதி, மளிகை கடை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணி, மற்றும் பேரமைப்பு வெண்ணந்தூர், பெரியமணலி, ராசிபுரம், நாமக்கல் நகராட்சி கடை சங்கத்தினர், நாமக்கல் செல்போன் சங்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *