பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி கேட்டு பள்ளிபாளையம் நகர தேமுதிகவினர் மனு

ஜனவரி 5

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் செய்தி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்
நகர தேமுதிகவினர் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளிகளாக வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் எண்ணிக்கைக்கேற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதே நேரத்தில் ரத்த வங்கி மற்றும் விஷக்கடிகளுக்கு சிகிச்சை என்பது பள்ளிபாளையத்தில் கொடுக்கப்படுவதில்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்ப காலங்களில் சிறப்பான பரிசோதனைகள் நடைபெற்றாலும் பிரசவ காலத்தில் பள்ளிபாளையத்தில் பிரசவம் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்பட்ட பெண்கள் ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு கர்ப்பிணி பெண்கள் உள்ளாகின்றனர்.எனவே
தமிழக அரசும் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனையில் போர்க்கால அடிப்படையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்வின்போது பள்ளிபாளையம் நகர செயலாளர் அ.வெள்ளியங்கிரி தலைமையில் மாவட்ட துணை செயலாளர் மகாலிங்கம், குமாரபாளையம் நகர செயலாளர் நாராயணசாமி, பள்ளிபாளையம் நகர அவைத்தலைவர் ரமேஷ், பள்ளிபாளையம் நகர இளைஞரணி செயலாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *