சாதிய பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்குத் தக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

தலைமைச்செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றதும், 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்யுமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொண்டிருந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்டங்களில், சாதிய பாகுபாடு காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘பஞ்சாப் முன்னாள் அமைச்சரை கைது செய்தது ஊழல் தடுப்புத் துறை’

எவ்வித சாதிய பாகுபாடின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களைக் கண்ணியத்தோடு நடத்தும்விதமாக, மேலே பட்டியலிடப்பட்ட இடங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துரிதமாகச் செயல்படுத்தவும், மேற்படி பிரச்சினைகளைக் களைவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்தேன். இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்தான ஒரு அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *