திருப்பூர்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) திருப்பூர் வருகிறார். இதற்காக வாகன போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலை வழியாக வாகனங்கள் செல்ல மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டது.

பல்லடத்தில் இருந்து பணப்பாளையம், தாராபுரம் ரோடு பிரிவு, வடுகபாளையம் பிரிவு, சித்தம்பலம் பிரிவு, ஆலூத்து பாளையம் பிரிவு, கள்ளக் கிணறு பிரிவு, தண்ணீர் பந்தல், புத்தெரிச்சல் பிரிவு, முத்தூர், வாவிபாளையம், குடிமங்கலம் வழியாக பொள்ளாச்சி செல்ல வேண்டும்.

பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் வழியாக வரும் வாகனங்கள் காமநாயக்கன்பாளையம் நால்ரோடு, மல்லே கவுண்டம்பாளையம், கரடிவாவி, கே. அய்யம்பாளையம், செட்டிபாளையம் ரோடு பிரிவு வழியாக பல்லடம் வர வேண்டும். அதுபோல் கோவை செல்லும் வாகனங்கள் கரடிவாவில் இருந்து காரணம்பேட்டை வழியாக கோவை செல்ல வேண்டும்.

உடுமலையிலிருந்து பல்லடம் நோக்கி வரும் வாகனங்கள் உடுமலை, குடிமங்கலம், வாவிபாளையம், முத்தூர், புத்தெரிச்சல், தண்ணீர் பந்தல், கள்ள கிணறு பிரிவு, ஆலூத்து பாளையம் பிரிவு, சித்தம்பலம் பிரிவு, வடுகபாளையம் பிரிவு, தாராபுரம் ரோடு பிரிவு வழியாக பனப்பாளையம் செல்ல வேண்டும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *