ஓபிஎஸ் மற்றும் அவரது மகன்களான ஓ.பி.ரவீந்திரநாத், ஜெய பிரதீப் ஆிகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அண்மையில் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால், ஓ.பி.ரவீந்திரநாத்தை தங்கள் கட்சியின் எம்பியாக இனி கருதக்கூடாது என்று நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இபிஎஸ் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இபிஎஸ் இந்த நடவடிக்கைக்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘அதிமுகவின் ஒரேயொரு எம்பியை கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தமது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள கொண்டுள்ள அவர், இபிஎஸ்சின் இந்த நடவடிக்கையை கட்சித் தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினின் தூக்கத்தைக் கெடுக்கும் அண்ணாமலை… காரணம் இதுதான்!

‘அதிமுகலின் பெயரை சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவெடுப்பதை கட்சித் தொண்டர்கள் நியாயமற்ற செயலாகவே பார்ப்பார்களே தவிர, ஒரு அறிவார்ந்த செயலாக யாரும் பார்க்க மாட்டார்கள்’ என்றும் சசிகலா கூறியுள்ளார்.

அத்துடன், ‘சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா… நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாராடா, நீ எண்ணிப்பாரடா…’ என்ற எம்ஜிஆரின் திரைப்பட பாடல் வரிகள் தான் தற்போது தமக்கு ஞாபகம் வருவதாகவும் எடப்பாடியை சசிகலா மறைமுகமாக சாடியுள்ளார்.

திமுக மூத்த அமைச்சருக்கு கொரோனா… ஸ்டாலின் ஷாக்!

மேலும், ‘ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி…. உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி’என்ற பாடல் வரிகளையும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சசிகலா, நம்மை வளர்த்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மகிழ்ச்சி அளி்க்கும் வகையில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் இருக்க வேண்டு்ம்’ என்றும் சசிகலா இபிஎஸ்ஸை குத்திக் காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *