இராசிபுரம்;டிச,30_

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மங்களபுரம் பகுதியில் ஒன்றிய துணை தலைவர் கண்ணன் தலைமையில்நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிந்தனையாளர் பிரிவு மாவட்டத் தலைவர் ஏகே பாஸ்கர் ,ஒன்றிய தலைவர் சிவக்குமார் ,பொதுச்செயலாளர் பிரகாசம், துணைத் தலைவர், அழகேசன், ஒன்றிய செயலாளர் சூர்யா , விவசாய அணி ஒன்றிய தலைவர் செல்வக்குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக், ஒன்றிய மகளிரணி தலைவர் கோமதி, துணை தலைவர் சாந்தி, கட்சி உறுப்பினர்கள்ஆறுமுகம், பலராமன், மணி, ராமலிங்கம், ஜெயராமன், சீனிவாசன் மற்றும் நலத்திட்ட ஒன்றிய துணை தலைவர் சுப்ரமணி மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *