Category: ஆந்திர

*வாழ்க்கையில் ஒன்று சேரமுடியவில்லை… திருமணமான இளம்பெண் முன்னாள் காதலனுடன் தற்கொலை*

சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா தொட்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா (வயது 19). அதே கிராமத்தை சேர்ந்தவர் வேணு (21). இவர்கள் 2 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அனுஷா, வேணுவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனுஷாவை வேறுவொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆடி மாதத்தையொட்டி அனுஷா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது காதலனை சந்தித்த அனுஷா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதை காதலனிடம் கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து 2 பேரும் தொட்டபள்ளி கிராமத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதை பார்த்த கிராம மக்கள் கெஞ்சர்லஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்க்கையில் 2 பேரும் சேர முடியவில்லை என்பதால், ஒன்றாக குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கெஞ்சர்லஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் விடுமுறை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் பக்தர்கள்

*தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 32 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.*…

சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு

சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழப்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் (64) உயிரிழந்துள்ளார். நெரிசலில்…

திருப்பதி கோயில் உண்டியலின் வருமானம் ரூ.130 கோடி: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கடந்த மே மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடி என கோவில் நிர்வாகம் அறிவித்தது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச உண்டியல்…

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வேர்கள் பறிமுதல்

திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வேர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 டன் எடை கொண்ட செம்மரம் வேர்களை வேனில் கடத்த…

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயலின் நகர்வுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் தரைக்காற்று…

ஆந்திராவில் பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புல்லட் பைக்

ஆந்திர மாநிலத்தில் வாகன பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புதிய புல்லட் பைக். வெடிக்கும் சப்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். நெத்தி கண்டி…