Category: சுற்றுலாத்தலங்கள்

*வாழ்க்கையில் ஒன்று சேரமுடியவில்லை… திருமணமான இளம்பெண் முன்னாள் காதலனுடன் தற்கொலை*

சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா தொட்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா (வயது 19). அதே கிராமத்தை சேர்ந்தவர் வேணு (21). இவர்கள் 2 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அனுஷா, வேணுவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனுஷாவை வேறுவொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆடி மாதத்தையொட்டி அனுஷா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது காதலனை சந்தித்த அனுஷா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதை காதலனிடம் கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து 2 பேரும் தொட்டபள்ளி கிராமத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதை பார்த்த கிராம மக்கள் கெஞ்சர்லஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்க்கையில் 2 பேரும் சேர முடியவில்லை என்பதால், ஒன்றாக குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கெஞ்சர்லஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாத 8 பஸ்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாத 8 பஸ்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி கடலூர்:கடலூர் மஞ்சகு ப்பத்தில் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் உள்ளது.இந்த பஸ் நிறுத்தம்…

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து.. தேனி மாவட்டம் குமுளியில் இருந்து பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன்…

திருச்செந்தூர் முருகன் கோயில் –
ஒரு கட்டிடக் கலை அதிசயம்

தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் – ஒரு கட்டிடக் கலை அதிசயம் !. பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி…

ஐப்பசி மாத பெளர்ணமி
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம்………………

இராசிபுரம்;அக்,28-

ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் ஸ்ரீ வரம் தரும்
பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வர மூர்த்தி பாளையம் உள்ளது.இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு பல ஆலையங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.தொடர்ந்து பல இடங்களில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விழா நடைபெற்று வருகிறது.அன்னாபிசேகம் பார்த்தால் ஆயுள் முழுவதும் அன்னம் கிடைக்கும் என்பது நமது ஐதீகம் ஆகும்.
இதனை அடுத்து ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு தொடர்ந்து 11 ம் ஆண்டாக அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் தர்மகர்த்தா சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார்.ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும்சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இங்குஅம்மனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இந்த பகுதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர் விடுமுறை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் பக்தர்கள்

*தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 32 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.*…

பழனி சாலை விரிவாக்க பணிக்கு மரங்கள் வெட்டி அகற்றம்

பழனி வழியாக செல்லும் திண்டுக்கல்-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் இந்த சாலையை…

பழனி முருகன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை

பழனி முருகன் கோவிலுக்கு வரும் 1 ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை கோவில் நிர்வாகம் அறிவிப்பு

கொல்லிமலையில் சர்வதேச பழங்குடி மக்கள் தின கருத்தரங்கம்

கொல்லிமலை;ஆக,14_ நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள நத்துக்குளி பட்டி கிராமத்தில் இன்று சர்வதேச பழங்குடியின தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பழங்குடியினர் வாழ்வாதாரம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது…

ஆடி மாத பெளர்ணமி முன்னிட்டு ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

இராசிபுரம்;ஆக…1-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி மாதம் பெளர்ணமிமுன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை…