ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைந்து காணப்படுகிறது. ஒருநாள் பாதிப்பு 2, 3, என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே பதிவாகி வந்தது. மேலும் தொற்று குறைந்ததால் மாவட்டத்தில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. இருப்பினும் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியது.

ஆனால் மக்கள் தொற்று குறைந்ததன் காரணமாக முக கவசம் அணிவதை மறந்து இயல்பாக சுற்றி திரிந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடமா-நிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்திலும் குறைந்திருந்த தொற்று பாதிப்பு கடந்த 3 நாட்களாக மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.

இதையடுத்து அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி இனி கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது.

ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்-படுத்தப்-பட்டுள்ளது. குறிப்பாக மாநகர பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் முழு வீச்சில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகரில் மக்கள் அதிகம் கூடும் ஈரோடு பஸ்நிலையம், காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஸ்வஸ்திக் கார்னர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூட கூடிய இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது அங்கு இருந்த மக்களிடம் கொரோனா தொற்று குறித்தும், முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்-கினர். மேலும் முககவசம் அணியாமல் சுற்றியவர்-களுக்கு ரூ.500 அபராதமும் விதித்தனர்.

மேலும் பஸ் நிலையங்களில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்-கொண்டு, கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு முறைகள் பின்பற்ற-ப்படு-கிறதா? என்பதையும் ஆய்வு செய்தனர். முக கவசம் அணியாத ஊழியர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *