பெயர்ச்சியடைந்தார் குருபகவான்: குருதலங்களில் குவிந்த பக்தர்கள்.

குரு பகவான் இன்று மாலை 6.20க்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு கோவில்களில் குருபெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகிலுள்ள தென்குடித்திட்டை, மதுரை அருகிலுள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் குரு கோவில், திருச்சி அருகிலுள்ள உத்தமர்கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி அகரம் குரு கோவில் உள்ளிட்ட குருதலங்களிலும், சிவாலயங்களிலுள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெறுகிறது.

இதையொட்டி ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்கள் தங்களது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *