கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்றடுக்கு பாதுகாப்பு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க இருக்கும் நிலையில் ஏராளமான போலீசார் குவிப்பு. மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு

வடக்கு மண்டல ஐஜி, திருச்சி மத்திய மண்டல ஐஜி வருகை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

மாணவியின் தாய் செல்வி கையெழுத்திட்டு உடலை பெற்றுக் கொண்டார்

11 நாட்களுக்கு பிறகு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் கணேசன், அதிகாரிகள் அஞ்சலி

மாணவியின் சொந்த ஊரில் 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக இருந்தது

தற்போது புதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ், விபத்தில் சிக்கியது

முன்னால் சென்ற கார் திடீரென நிறுத்தியதால் விபத்து

மாணவியின் உடலைப் பார்த்து கதறி அழுது இறுதி அஞ்சலி செலுத்தும் கிராம மக்கள்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட மாணவியின் உடல் கடலூர் மாவட்டம் எல்லையை வந்தடைந்தது.

மாணவியின் உடல் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

மாணவியின் உடல் இருக்கும் இடத்தை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *