வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்? _ஊட்டி: குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பல உயரதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில், இந்த விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களை களத்தில் இருந்து நேரடியாகவே பெற்றுள்ளோம்._

_விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

CDS பிபின் ராவத்தின் மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன._

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *