பள்ளிபாளையத்தில் ஆட்டோ சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் .

டிசம்பர் 7

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை நால்ரோடு பகுதியில் செயல்படும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆட்டோ ஓட்டுனர் பிரிவு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
வீராசாமி,கோபால் தலைமை தாங்கினர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.மேலும் இவர்கள் கோரிக்கையாக வெப்படை நான்கு ரோடு வழித்தடத்தில் செயல்படும் ஆட்டோக்களை தவிர்த்து கூடுதலாக புதிதாக ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது, தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை காலம் தாழ்த்தி வருகிறது. எனவே விரைவாக உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியும், தொடர்ந்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் இடையே மோதல் போக்கு நிலவுவதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெப்படை நால்ரோடு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்திற்கு செல்ல போவதாக ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *