பள்ளிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
போலீசார் விசாரணை

டிசம்பர் 7

நாமக்கல் மாவட்டம்
குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனி சந்தைப் பகுதியில் நேற்று அதிகாலை திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல்நாத் பி.இ.படித்துள்ளார். வயது 23
ஈரோடு பாட்டி வீடு செல்வதாக கூறி பள்ளிபாளையம் வந்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது… பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியிலிருந்து ஆவரங்காடு சனிசந்தை பகுதிக்கு வந்த கோகுல்நாத் அங்கிருந்தவர்களை கல்லால் தாக்கி தகராறு செய்துள்ளார். மேலும் தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிலர் மீது கற்களைக்கொண்டு தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் கோகுல் நாத்தை அங்கிருந்த பொதுமக்கள் ஒரு சிலர் பிடிக்க முயன்ற பொழுது கற்களைக் காட்டி மிரட்டியுள்ளார். இந்நிலையில் கற்களைக் கொண்டு தாக்கியதில் பள்ளிபாளையம் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த வேலப்பன் 75 வயது முதியவர் படுகாயமடைந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.. இது குறித்த தகவல் பள்ளிபாளையம் காவல்துறைக்கு தெரிவிக்கபடவே உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் கோகுல்நாத் தை பிடிக்க முயன்றனர் காவல்துறைக்கு போக்குக் காட்டி விட்டு தப்பியோட முயன்ற கோகுல்நாத்தை போலீசார் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் கோகுல்நாத் கவுண்டம்பாளையம் ,குமாரமங்கலம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்தனர். மேலும் இவர் மனநல பாதிப்புக்கு உள்ளானதால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. கோகுல்நாத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த வேலப்பன் உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.போலீசார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிகழ்வு பள்ளிபாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *