இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்ட்ம்

நாமக்கல் டிச 07

நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி ஒருவர் அங்குள்ள அறிவியல் ஆசிரியர் மதிவாணன் மீது அவர்களின் பெற்றோர்களுடன் சேர்ந்து சில மாணவ அரசியல் அமைப்புகளின் ஆதரவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் புகார் கொடுத்ததை அடுத்து நேற்று ஆசிரியர் மதிவாணன்
மீது பொய்யான பலி புகார் கொடுப்பதாகக் கூறி இதர சக ஆசிரியர்கள் ஆசிரியைகள் நேற்று பள்ளி வகுப்பு நேரம் முடிந்து பள்ளியின் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி இரவு எட்டரை மணிவரை போராடினார்கள் அதன்பின்பு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஆனைவரும் கலைந்து செல்லுங்கள் பேச்சுவார்த்தை வேண்டுமானால் நாளைக்கு அதாவது நேற்று வைத்துக் கொள்ளலாம் என்று அவர்களை அனுப்பி வைத்தார் இதையடுத்து நேற்று பள்ளியின் தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் துறைரீதியான நடவடிக்கை காரணமாக நேற்று அதிகாலை 4 மணிக்கு பரமத்தி வேலூர் அருகில் இருக்கும் அறிவியல் ஆசிரியர் மதிவாணன் இல்லத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை அழைத்து வந்து நாமக்கல் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள் இதற்கிடையில் பெண்கள் மற்றும் மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு உரிய நடவடிக்கைகளை போஸ்கோ சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை இல்லை போஸ்கோ சட்டம் விதிகள் மற்றும் விசாரணைக் குழுக்கள் மத்திய மாநில அரசுகள் அறிவித்தபடி விசாரணையை செயல்படுத்துவது இல்லை என்று இந்த குற்றங்களுக்கு எதிராக சரியான விசாரணை தேவை புதிய நடவடிக்கைகள் தேவை ஆசிரியர்கள் இந்த பாலியல் குற்றம் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆதரவு தரக் கூடாது போன்ற முழக்கங்களை எழுப்பி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் இயக்கமான இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் தலைவி தேன்மொழி தலைமை ஒவகித்தார் இதில் மாநில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் கண்ணன் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பினார் இதில் 50 பேர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *