ஏற்காட்டில் மாற்று திறனாளிகள் குறித்து பழங்குடி சுய உதவி குழு பொறுப்பாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி…
மெர்சி கிராம் முன்னேற்ற சங்கம் மத்திய அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரம் துறையின் கீழ் இயங்கும் மாற்று திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் NIEPWD இணைந்து மாற்று திறனாளிகள் குறித்து பழங்குடி மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் நாகலூர் பஞ்சாயத்து சொரக்காபட்டி கிராமத்தில் பழங்குடி மக்கள் சுய உதவி குழு பொறுப்பாளர்களுக்காக 27.02.2022 அன்று நடைபெற்றது.இதில் பழங்குடி மக்களுக்கான வாழ்வாதார கூட்டமைப்பின் ஏற்காடு பகுதி பொறுப்பாளர் திருமதி சுந்தரி, தி.சக்திவேல்
தலைமை தாங்கினார். மெர்சி கிராம முன்னேற்ற சங்க செயலாளர் திருமதி சியாமளா ,
NIEPMD சார்பாக பேராசிரியர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் கலந்து கொண்டு NIEPMD சேவைகள், அரசு சலுகைகள், மாற்று திறனாளிகளின் வகைகள், குறித்து விளக்கம் அளித்தார். போலியோ சொட்டு மருந்து , கர்ப்ப கால பராமரிப்பு,
முறையான தொடர் சிகிச்சை குறித்து நாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ,
டாக்டர் .வாணிஸ்ரீவிளக்கி கூறினார் பழங்குடி‌ மக்களுக்கான மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் திரு.முருகேசன் அவர்கள் விளக்கம் அளித்தார். மாற்றுதிறனாளிக்கான சுய உதவி குழுக்களின் சமூக பொறுப்பு குறித்து திருமதி.சியாமளா அவர்கள் எடுத்து கூறினார்.சுய உதவி குழு பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது .இதில் 50 சுய உதவி குழு பொறுப்பாளர்கள் கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *