பள்ளிபாளையம்: தவற விட்ட குழந்தையை காவல்துறையினர் முன்னிலையில் பெற்றோரிடம் பாதுகாப்பாய் ஒப்படைத்த பொதுமக்கள் – நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வாரசந்தையில் தவறிவிட்ட குழந்தையை இரு நாட்களுக்கு பின்னர் மீட்ட பெற்றோர்- பெற்றோருடன் துள்ளிக்குதித்து ஒடிய குழந்தையின் நெகிழ்ச்சி நிகழ்வு

ஈரோடு மாவட்டம் மரப்பாலம் பகுதியை சேர்ந்த முஸ்தபா – தீபா தம்பதியர். இவர்களது மூன்று வயது குழந்தை பாலமுருகன். குழந்தையின் பெற்றோருக்கு வீடு ஏதும் இல்லாமல் சாலையோரம் வசித்து அன்றாட கூலி வேலை செய்பவர்கள் என கூறப்படுகிறது . இந்நிலையில் சனிக்கிழமை அன்று ஆவாரங்காடு சனிசந்தை பகுதிக்கு வந்த குழந்தையின் பெற்றோர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அழைத்துவந்த குழந்தையை சந்தையில் விட்டுவிட்டு சென்று விட்டனர். குழந்தை ஒன்று சந்தைப் பகுதியில் தனியாக அழுது கொண்டு நிற்பதை கவனித்த ஆவரங்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருசிலர் அழுது கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு தங்கள் வீட்டில் தங்க வைத்தனர். இது குறித்த தகவலை பள்ளிபாளையம் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு பின் திங்கள்கிழமை ஆவாரங்காடு பகுதியில் தங்கள் குழந்தை காணவில்லை என தேடியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரித்த காவல்துறையினர் குழந்தையை கொண்டு வரச்சொல்லி பொதுமக்களுக்கு தகவல், கொடுத்தனர்.

இதனை அடுத்து சிறிது நேரத்துக்குப் பிறகு குழந்தை குழந்தைப் பள்ளிபாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டது. பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமார் முன்னிலையில் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை தவற விட்டுவிட்டு தற்பொழுது குழந்தையை தேடி வருவதா? கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதா என பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகுமார் குழந்தையின் பெற்றோருக்கு அறிவுரைகளையும் மீண்டும் இது போல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து குழந்தையை தாய் தீபாவிடம் ஒப்படைத்தனர். தாயைக் கண்டதும் குழந்தை துள்ளி குதித்து தாவி கட்டி அனைத்தது. குழந்தை வைத்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையை பிரிய மனமில்லாத பொதுமக்கள் குழந்தையை வாஞ்சையுடன் முத்தமிட்டு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர் .இந்த நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *