கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையாக 135 இடங்களைப் பிடித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. மேலும் பாஜக அமைச்சர்கள் 8 பேர் தோல்வியை சந்தித்துள்ளனர். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; கர்நாடக தேர்தலை காங்கிரஸ் கட்சி வெறுப்புணர்வுடன் அல்ல, அன்பால் எதிர்கொண்டது. கர்நாடக தேர்தல் வெற்றி என்பது மக்களுக்கான வெற்றி.

கர்நாடக தேர்தலுக்காக பாடுபட்ட தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி. கர்நாடகா தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்துக்கள். முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிலை அனைத்து மாநிலங்களில் தொடரும். கர்நாடகா தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றிபெற்றுள்ளது. கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும். காங்கிரஸ் அளித்த முக்கியமான 5 வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *