பிள்ளைக்களத்தூர் கிராமத்தில்
விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் கூட்டம் / வயல்தின விழா
பரமத்தி வட்டாரம், பிள்ளைக்களத்தூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாரதப்பிரதமர் அவர்களின் 75ம் ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் கீழ் “விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் கூட்டம்/வயல் தினவிழா” பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.செ.ராதாமணி அவர்கள் பயிற்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், மக்காசோளப்பயிரில் படைப்புழுத்தாக்குதலின் அறிகுறிகள், கட்டுப்படுத்தும் முறைகள், கடைபிடிக்க வேண்டிய விதைதேர்வு, விதைநேர்த்தி, மண்பரிசோதனையின் விபரப்படி உரமிடல் பயிர் சுழற்சி, கோடைஉழவு, பொருளாதார சேதார நிலையை பார்த்து பூச்சிகொல்லி பூஞ்சான கொல்லி பயன்படுத்துதல், நீர்மேலாண்மை, அறுவடை பின்செய்நேர்த்தி போன்ற காரணிகளை பயன்படுத்தி குறைந்த வேலையாட்கள், குறைந்த முதலீடு அதிக மகசூல் அதிக லாபம் பெறலாம் என பயிற்சி வழங்கினார்.
பயிற்சியில் கோயமுத்தூர் வேளாண்மைபல்கலைகழகமண்ணியியல் துறை விஞ்ஞானி(ஓய்வு), முனைவர்.அப்பாவு மண்வகைகள், மண்வளம் குன்றுவதற்கான காரணங்கள், குறைந்த மண்ணின் ஈரப்பதம், களர் மற்றும் உவர் தன்மை மேல்மண், அடிமண் இறுக்கமும் அதன் நிவர்த்தி முறைகளும், நிலவளமேலாண்மை, மண்வள மேலாண்மை, தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை, பராம்பரிய வேளாண்மை, பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர்களின் நன்மைகள், மூடாக்கு போடுதல், பாரம்பரிய விதைகள், தொழில்நுட்ப கருவிகள் கொண்டு தரிசுநிலங்களை மேம்படுத்தல் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி அவர்களின் சந்தேகங்களையும் தெளிபடுத்தினார்.
பயிற்சியில் வேளாண்மை அலுவலர் முனைவர்.சி.பாபு அவர்கள் வேளாண்மை திட்டங்கள், பயிர் சாகுபடி பரப்பு குறித்து விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் எனவும், விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் பற்றியும், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் பெற முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் கரும்பு, மக்காசோளம், தென்னையில் ஒட்டுண்ணியின் பயன்கள் குறித்து விளக்கமளித்தார்.
பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு.பிரபு அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் திரு.மா.இரமேஷ் மற்றும் பி.ஜி.பி வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கருத்து கண்காட்சி அமைத்து, மதிய உணவு வழங்கி, பயிற்சியினை ஏற்பாடு செய்து நன்றி கூறினர்.
வேளாண்மை உதவி இயக்குநர், பரமத்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *