பள்ளிபாளையத்தில் மதுபான கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நவம்பர் 25

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஜீவா செட் பகுதியில் கடை எண் 5910 எண் கொண்ட புதிதாக அரசு மதுபானக்கடை கடந்த வாரத்தில் திறக்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்புமின்றி பொதுமக்கள் பெண்கள், குடியிருப்பு பகுதியில் மாணவ, மாணவர்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்து மதுபானக்கடை திறக்க பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக மூட வேண்டும், பெண்களுக்கு பொதுமக்களுக்கு, பாதுகாப்பு கேட்டு திராவிடர் விடுதலைக் கழகம், லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதவன் லோக் ஜன சக்தி இளைஞரணி மாநில துணைத்தலைவர் ஆதவன் தலைமை தாங்கினார். இவர்களுடன் சரவணன், திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட செயலாளர், முத்துப்பாண்டி மாவட்ட அமைப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் முருகேசன், மாவட்ட தலைவர் லோக் ஜன சக்தி கட்சி , மாணிக்கம் புரட்சிகர இளைஞர் முன்னணி, வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) புகழேந்தி, இடதுசாரி தொழிற்சங்க மையம் மாணிக்கம், இளைஞரணி லோக் ஜனசக்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *