உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: பள்ளிபாளையம் நகர திமுகவினர் ரத்ததான முகாம் நடத்தினர்

நவம்பர் 25

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளையொட்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் நலத்திட்ட உதவி, ரத்ததான முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிபாளையம் நகர திமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அ.ரவிச்சந்திரன் நகர திமுக செயலாளர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அ.குமார் முன்னிலை வகித்தார்.
மேலும் இவர்களுடன் பள்ளிபாளையம் நகர இளைஞரணி, மாணவரணி, முன்னணி ஊழியர்கள் என திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *