தீவிர வாக்கு சேகரிப்பில் பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்

பிப்ரவரி 8

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது… வேட்புமனுத்தாக்கல் ,வேட்புமனு பரிசீலனை,, மனுவை வாபஸ் பெறுதல், சின்னம் ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவுற்ற நிலையில் வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2- வார்டுகளும் பள்ளிபாளையம் நகராட்சியில் மதசார்பற்ற முற்போக்கு திமுக கூட்டணியில் 1-வார்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆலாம்பாளையம் பேரூராட்சி 10-வது வார்டில் போட்டியிடும் கருப்பண்ணன் மற்றும் 14-வது வார்டில் போட்டியிடும் ஆர்.ராணி பள்ளிபாளையம் நகராட்சி 18-வது வார்டில் போட்டியிடும் எம்.சரவணன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மூன்று வார்டிலும் அதிமுக நேரெதிர் அணியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பம்பரம் போல திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் பொதுமக்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *