பள்ளிபாளையம் நால் ரோட்டில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஜனவரி 12

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளானது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தந்தை பெரியார் உணர்வாளர்களும், தந்தை பெரியார் கூட்டமைப்பை சேர்ந்தவர்களும் முற்போக்கு அமைப்பினரும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியில் திராவிடர் கழகம் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.திராவிட.கழக. நாமக்கல்
மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.. மாவட்ட தலைவர்
ஏ.கே.குமார் மு.சரவணன்
திராவிடர் விடுதலை கழகம், லோக் ஜனசக்தி கட்சியின் மாநில இளைஞரணி துணை தலைவர் ஆதவன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாணிக்கம்
,காவிய நெடுஞ்செழியன் திமுக, ஜான்பாய் திமுக நகர அவைத்தலைவர் உள்ளிட்ட ஏராளமான பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், திராவிடர் விடுதலை கழகத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளாக்கிய சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும், தொடர்ச்சியாக தேசத் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்துவதை தடுத்து நிறுத்திட கோரியும் தேசத் தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டுகள் அமைத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *