இராசிபுரம்; செப்,18

பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளான இன்று அவர் நீண்ட ஆயுளோடு வாழ மங்களபுரம் ஊராட்சி உரம்பு ஸ்ரீவரதராஜபெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அத்திமரத்துக்குட்டை ஏரிக்கரையில் 100 பனைவிதை நடப்பட்டது. நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சிந்தனையாளர் பிரிவு மாவட்டத் தலைவர் A.K.பாஸ்கர், மு. ஒன்றிய பொதுச்செயலாளர் Adv நல்லதம்பி, ஒன்றிய அமைப்புசாரா பிரிவு தலைவர் ஆறுமுகம், ஒன்றிய விவசாய அணி பொதுச்செயலாளர் மணி, முன்னாள் ராணுவ வீரர் பிரிவு தலைவர் பலராமன், கிளைத்தலைவர் புவனேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், மன்னாதி உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *