தினம் ஒரு தகவல்

மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகை சிவக்கரந்தை !!

சிவக்கரந்தை மருத்துவகுணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது.

நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து அழற்சியைக் குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். அத்துடன் இந்த மூலிகையை தினமும் சாப்பிட்டால் உடல் அழகு மேம்படும். இதற்கு கரந்தை, விஷ்ணுகிராந்தி போன்ற வேறு பல பெயர்களும் உண்டு.

கரந்தை செடிகளில் சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, வெண்கரந்தை, கருங்கரந்தை எனப் பலவுண்டு. அதில் சிவகரந்தை வெள்ளை மற்றும் சிகப்பு என இரண்டு வகைப்படும். அதன் பூக்கள், மற்றும் காய்களின் நிறத்தை வைத்து சிகப்பு சிவகரந்தை, வெள்ளை சிவகரந்தை வகைபடுத்தப்படுகிறது.

இந்த மூலிகை அதிக வெப்பமுள்ள பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. இந்த மூலிகையின் தண்டு, இலை, பூ, வேர், விதை என அனைத்துமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை.

சிவகரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். சிவகரந்தை செடியின் வேரை கொண்டு செய்யப்படும் கஷாயம் மூலநோயை குணமாக்கும்.

சிவகரந்தை பொடி விந்தணுகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்மையை அதிகரிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *