ஏப்ரல் 5

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செய்தி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 39- பெண்கள் குடும்ப தலைவராக இருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மை பெண்களுக்கு கணவர் கிடையாது. நிரந்தர வருமானம் இல்லாததால் சொந்த நிலமோ வீடோ சொத்தோ இல்லை! அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் இவர்கள் தினக்கூலிகளாக வீட்டு வேலை செய்பவர்களாகவும் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு பட்டா கேட்டு வருவாய் துறையிடம் விண்ணப்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் பலமுறை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ,கிராம நிர்வாக அலுவலர், உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை எனக் கூறி ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்காமல் இழுத்தடிக்கும் குமாரபாளையம் வருவாய்த்துறை நிர்வாகத்தை கண்டித்தும் உடனடியாக இந்த குடும்பங்களுக்கு பட்டா கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் …..இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல்
மாவட்ட செயலாளர் வே காமராஜ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சிந்தனைச்செல்வன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி பாஸ்கர்,
திருச்செங்கோடு நகரசெயலாளர் சக்தி, எலச்சிபாளையம் ஒ செ முத்துகிருஷ்ணன், பரமத்தி ஒசெ கிள்ளிவளவன்,
.திகோடு ஒ.து.செ டைல்ஸ் சக்தி, குமாரபாளையம் நகர துணை செயலாளர் பிரபு, லதா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்…. 50-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *